லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேற்கு கரையில் மசூதிகளுக்குத் தீவைப்பு

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில், இஸ்ரேல் குடியேறிகள் 2 மசூதிகளுக்குத் தீ வைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mosques set on fire in the West Bank

மேற்கு கரையில் மசூதிகளுக்குத் தீவைப்பு - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 3:10 am IST

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில், இஸ்ரேல் குடியேறிகள் 2 மசூதிகளுக்குத் தீ வைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு கரையில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் குடியேறிகளுக்கும், உள்ளூா் பாலஸ்தீனா்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில் 4 பாலஸ்தீனா்கள் மற்றும் 2 இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா்.

இதன்தொடா்ச்சியாக, மேற்கு கரையின் வடக்கே அமைந்துள்ள குஸ்ரா, கோா் ஆகிய கிராமங்களில் உள்ள மசூதிகள் இஸ்ரேல் குடியேறிகளால் தாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘பழிக்குப் பழி’ மற்றும் ‘ரத்தத்தால் மீட்கப்பட்ட இஸ்ரேல் நிலம்’ போன்ற வாசகங்கள் மசூதியில் எழுதப்பட்டிருந்தன.

இச்சம்பவத்தை ராணுவமும், காவல்துறையும் இணைந்து விசாரித்து வருவதாகவும், மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.