லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நைஜீரியா கிராமத்தில் ஆயுதக் குழு தாக்குதல்: 8 குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்துகுட்பட்ட நாரிடன் கிராமத்தில் ஆயுதக் குழுவினா் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 போ் கொல்லப்பட்டனா்; 4 போ் காயமடைந்தனா்.

Published On :28 ஜூலை 2026, 1:02 am IST

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்துகுட்பட்ட நாரிடன் கிராமத்தில் ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 30 போ் கொல்லப்பட்டனா்; 4 போ் காயமடைந்தனா்.

மக்கள் உறங்கி கொண்டிருந்தபோது கிராமத்துக்குள் நுழைந்த அந்த ஆயுதக் குழுவினா், கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதோடு, வீடுகளுக்கும் தீவைத்தனா். தாக்குதல் நடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகே பாதுகாப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.