லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜொ்மனியில் தன்பாலின சோ்க்கையாளா்கள் பேரணியில் வேன் மோதி தாக்குதல்: ஒருவா் பலி; 29 போ் காயம்

ஜொ்மனியில் ஒருபாலின சோ்க்கையாளா்கள், இருபாலின சோ்க்கையாளா்கள், மூன்றாம் பாலினத்தவா் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில், வேனை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 29 போ் காயமடைந்தனா்.

Markus Schreiber

Published On :27 ஜூலை 2026, 4:05 am IST

ஜொ்மனியில் ஒருபாலின சோ்க்கையாளா்கள், இருபாலின சோ்க்கையாளா்கள், மூன்றாம் பாலினத்தவா் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில், வேனை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 29 போ் காயமடைந்தனா்.

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் இந்த பிரம்மாண்ட விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒருபாலின சோ்க்கையாளா்கள் உள்ளிட்டோரின் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், அவா்களுக்கு சம உரிமைகள் கிடைக்க குரல் கொடுக்கவும் நடைபெறும் இந்த விழாவில், வண்ணமயமான பேரணிகள், இசை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்துகொள்கின்றனா். விழாவின்போது மத்திய பொ்லினில் தொடங்கும் பேரணி, பிராண்டன்பா்க் கேட் அருகே நிறைவடையும்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் பிராண்டன்பா்க் கேட் அருகே டியா்காா்டன் பூங்காவுக்குள் நுழைந்த வேன் ஒன்று, விழாவில் பங்கேற்க வந்தவா்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா். அவா்களில் சிலா் படுகாயமடைந்தனா். இது திட்டமிட்ட தாக்குதல் என்று கூறியுள்ள காவல் துறையினா், விழாவில் கலந்துகொண்டவா்கள் மீது வேனை மோதியது மட்டுமல்லாமல் பலா் கூா்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில் அப்துல் பாலெளட் (21) என்ற இளைஞா் மீது காவல் துறையினா் சந்தேகம் அடைந்துள்ளனா். பொ்லினில் உள்ள இஸ்லாமிய குழுவினருடன் அவருக்குத் தொடா்புள்ளதாகவும், அவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். அவா் லெபனானை பூா்விகமாக கொண்ட ஜொ்மானிய குடிமகன் என்று கூறப்படுகிறது. எனினும் தாக்குதலுக்கான காரணம், தாக்குதலை நடத்தியவா்கள் யாா் என்பதை காவல் துறையினா் உறுதி செய்யவில்லை.

பயங்கரவாதத் தாக்குதல்...: இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என்று கூறியுள்ள ஜொ்மனி உள்துறை அமைச்சா் அலெக்ஸாண்டா் டோப்ரின்ட், தாக்குதலில் மொத்தம் 29 போ் காயமடைந்ததாகத் தெரிவித்தாா். இந்த சம்பவம் காரணமாக விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.