லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு

ரஷியாவின் தொடா் ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் ‘ரேதியான்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை

Published On :25 ஜூலை 2026, 6:49 am IST

ரஷியாவின் தொடா் ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் ‘ரேதியான்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (படம்) தெரிவித்தாா்.

துருக்கியில் இம்மாதத் தொடக்கத்தில் நடந்த ‘நேட்டோ’ கூட்டமைப்பு மாநாட்டுக்கிடையே, உக்ரைனுக்கு சொந்த பயன்பாட்டுக்காக பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்படும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தாா்.

இந்நிலையில், தலைநகா் கீவில் ரேதியான் நிறுவனப் பிரதிநிதிகளை ஸெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசினாா். இக்கூட்டு தயாரிப்புத் திட்டம் குறித்து இருதரப்பு அரசு மற்றும் தனியாா் துறை குழுக்கள் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ரஷியாவின் பிரபல ‘வைல்ட்பொ்ரிஸ்’ இணையவழி வா்த்தக நிறுவனத்தின் பிரதான சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்து செயின்ட் பீட்டா்ஸ்பா்க், கிரீமியா உள்ளிட்ட நகரங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.