லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மனிதர்களுக்கான ஃப்ரிட்ஜ் உருவாக்கியிருக்கும் ஜப்பான்!

மனிதர்களுக்கான ஃப்ரிட்ஜ்-ஐ ஜப்பான் உருவாக்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்

மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்

Published On :20 ஜூலை 2026, 3:16 pm IST

உலகம் முழுவதும் வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வரும் நிலையில், பொது வெளிகளில் பணியாற்றுவோருக்காக், மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் உருவாக்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜப்பான்.

எப்போதும் பல வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போனது ஜப்பான். அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, மனிதர்களைக் குளிர்விக்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளது. இதனை பலரும் மனித ஃபிரிட்ஜ் என்றழைக்கிறார்கள்.

வெளியில் கடும் வெப்பத்தில் பணியாற்றுவோருக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஃபிரிட்ஜ் உள்ளே சென்றால் போதும், ஒரு சில வினாடிகளில் மனிதனின் உடல் வெப்ப நிலையை கணிசமாகக் குறைந்துவிடும். ஒரு அறை முழுவதையும் குளிரூட்டி, அதற்குள் சென்று ஓய்வு எடுப்பதைக் காட்டிலும், பிரிட்ஸ் போன்ற ஒரு சிறிய அறைக்குள் ஒருவர் சென்று உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர், தொழிற்சாலை ஊரியர்கள், வெளியே அதிக வெப்பத்தில் பணியாற்றுவேருக்கு வெப்பத்தின் காரணமாக ஸ்டிரோக் போன்றவை ஏற்படும் அபாயத்திலிருந்து காக்க இது உதவும் என்று கூறப்படுகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டிருக்கும் இது உள்ளே ஒருவர் மட்டும் சென்று அமர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்பவர் கதவுகளை மூடிக்கொண்டு குளிர்சாதனத்தை ஆன் செய்ய வேண்டும்.

இதனை எங்கு வேண்டுமானாலும் நகரத்திச் செல்லலாம். இதற்காக பெரிய கட்டமைப்புகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை. கடுமையான வெய்யிலில் வேலை செய்பவர்கள் இதற்குள் சென்று 5-10 நிமிடங்கள் இருந்தால் போதும், உடல் வெப்பம் வெகுவாகக் குறைந்துவிடும். 20 நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே குளிர்நிலை குறைந்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Summary

Japan has created a fridge for humans!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.