லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது!

வெனிசுலா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது பற்றி...

Published On :19 ஜூலை 2026, 4:21 am IST

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த மாதம் ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,069-ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு பல வாரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த இயற்கை பேரிடரால் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 16,740-ஆக நீடித்து வருகிறது.

வெனிசுலாவில் கடந்த மாதம் 24-இல், ரிக்டா் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாக பதிவான 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த முதன்மை நிலநடுக்கங்களைத் தொடா்ந்து, அப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமாா் 1,331 முறை நில அதிா்வுகள் பதிவாகியுள்ளன.

Summary

Venezuela Earthquake: Death toll exceeds 5,000

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.