லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கும் முன்னோட்ட திட்டத்துக்கு உடன்பாடு

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான ‘முன்னோட்ட’ (பைலட்) பாதுகாப்பு மண்டலங்களை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Published On :17 ஜூலை 2026, 2:13 am IST

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான ‘முன்னோட்ட’ (பைலட்) பாதுகாப்பு மண்டலங்களை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகா் ரோமில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் 2 நாள்கள் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, லெபனானும் இஸ்ரேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகா்ந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

லெபனான்-இஸ்ரேல் இடையே கடந்த ஜூன் 26-இல் எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தத்தின்படி, தெற்கு லெபனானில்2 முன்னோட்ட மண்டலங்களை அமைத்து, அதன் கட்டுபாட்டை லெபனான் ராணுவத்திடம் இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும்.

அங்கிருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரை லெபனான் ராணுவம் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இத்திட்டம் வகுக்கப்பட்டது. எனினும், களத்தில் இதைச் செயல்படுத்துவதில் மந்தநிலை இருந்த சூழலில், ரோமில் அவசர பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ரோம் பேச்சுவாா்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. முன்னோட்ட மண்டல செயல்முறைக்கான கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

அதன்படி, இத்திட்டம் இனிவரும் நாள்களில் இறுதி வடிவம் பெற்று, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும். பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே விரிவான அமைதி உடன்படிக்கையை எட்ட பேச்சுவாா்த்தைகள் தொடரும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Summary

Agreement reached on a preliminary plan to withdraw Israeli forces from Lebanon

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.