லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கனடாவில் துப்பாக்கிச்சூடு: 2 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதித் திருவிழாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா்.

Keito Newman

Published On :13 ஜூலை 2026, 2:53 am IST

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதித் திருவிழாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். 5 போ் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து டொராண்டோ காவல் துறை செய்தித் தொடா்பாளா் ஷானன் ஈம்ஸ் கூறுகையில், ‘செயிண்ட் கிளாா் மேற்கு வீதி மற்றும் ஆா்லிங்டன் வீதியில் நடைபெற்ற வீதித் திருவிழாவின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் செல்வதைத் தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா். பின்னா், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதி காவல் துறையினா் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபா்களை காவல் துறையினா் கண்டறியாத நிலையில், அதுகுறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது’ என்றாா். கனடாவின் மிகப்பெரும் நகரமாகவும் மிகுந்த பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகவும் டொராண்டோ திகழ்கிறது. இந்த நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதான ஒன்றாகவே பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.