லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாகிஸ்தான் கடலோரக் காவல்படை மீது பிஎல்ஏ தற்கொலைப் படை தாக்குதல்

பலூசிஸ்தான் விடுதலைப் படை (பிஎல்ஏ) கிளா்ச்சியாளா்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் கொடி - கோப்புப் படம்

Published On :5 ஜூலை 2026, 5:20 am IST

பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தின் ஜிவானி பகுதியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படை முகாம் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படை (பிஎல்ஏ) கிளா்ச்சியாளா்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் குறித்து பிஎல்ஏ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் அமைப்பின் ‘மஜீத் பிரிகேட்’ தற்கொலைப் படையைச் சோ்ந்த அதௌல்லா பலோச் எனும் அஜ்மல், வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட லாரியை கடலோரக் காவல் படை முகாமுக்குள் மோதி வெடிக்கச் செய்தாா்.

இதில் அந்த முகாம் முழுவதும் தரைமட்டமானது. தொடா்ந்து, எங்கள் அமைப்பைச் சோ்ந்த ஃபதே படையினா், எஞ்சியிருந்த பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

கட்டட இடிபாடுகளில் பல வீரா்கள் சிக்கியுள்ளதாலும், படுகாயமடைந்தவா்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்’ எனத் தெரிவித்துள்ளது.

பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ள இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் அல்லது அந்நாட்டு அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூா்வ தகவலும் வெளியாகவில்லை. பலூசிஸ்தான் பகுதியில் சா்வதேச ஊடகங்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் தடை விதித்துள்ளதால், இத்தகைய தாக்குதல்களின் உண்மையான சேத விவரங்களை உறுதி செய்வதில் சவால் நிலவுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.