பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இனப்படுகொலை! இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக துருக்கி பிடி உத்தரவு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி அரசு பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து...

Turkey issues 'genocide' warrant for Israel PM Netanyahu

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் - கோப்புப் படம் | AP

Published On :21 ஆகஸ்ட் 2026, 8:27 pm IST

இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி அரசு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

காஸா மீது கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வந்த போருக்கு எதிராக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார்.

இதனைத் தொடர்ந்து, துருக்கியில் இருந்து கடந்த மே மாதம் காஸாவுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற 50-க்கும் அதிகமான சர்வதேச கப்பல் கூட்டத்தை நடுவழியில் இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தி 430 ஆர்வலர்களைக் கைது செய்தது.

பின்னர், விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 430 ஆர்வலர்கள் இஸ்ரேலிய சிறைகளில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், சிறையில் கைகள் கட்டப்பட்டு முழங்காலிட்ட நிலையில் இருந்த ஆர்வலர்களை இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சரான பென் குவிர் ஏளனம் செய்யும் விடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விசாரணையைத் துவங்கியுள்ள நிலையில், இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோரைப் பிடிக்க சர்வதேச காவல்படைக்கு துருக்கி அரசு பிடி உத்தரவுக்கான ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கவுள்ளதாக, துருக்கியின் சட்டத்துறை அமைச்சர் அகின் குர்லக் இன்று (ஆக. 21) தெரிவித்துள்ளார்.

இத்துடன், நெதன்யாகு மற்றும் அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோரின் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, கடுமையான வகையில் சுதந்திரத்தைப் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில் 78,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Turkey has issued an international arrest warrant against Israeli PM Netanyahu on charges of genocide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.