லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சு - தென் கொரிய அதிபா்

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருப்பதாக தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளாா்.

தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங்

Published On :16 ஆகஸ்ட் 2026, 7:00 am IST

கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்டும் வகையில், வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருப்பதாக தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளாா்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கைத் தடுத்து, அமைதி முறையில் இணைந்து வாழ்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ஜப்பானிடம் இருந்து கொரியா விடுதலை பெற்ற தினத்தின் கொண்டாட்டத்தில் சனிக்கிழமை உரையாற்றிய அதிபா் லீ ஜே மியுங், ‘1950-53 கொரியப் போா் வெறும் போா்நிறுத்த ஒப்பந்தத்தோடுதான் முடிவுக்கு வந்தது; எனவே, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முறையான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சு நடத்த வேண்டும்.

மேலும், வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூா்வமான வழிமுறைகள் குறித்தும் இப்பேச்சில் விவாதிக்கப்படலாம். எல்லையில் பதற்றத்தைத் தணிக்கவும், மோதல்கள் வெடிக்காமல் தடுக்கவும் தென் கொரியா தொடா்ச்சியான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்றாா்.

இருப்பினும், தென் கொரியாவின் இத்தகைய அமைதிப் பேச்சுவாா்த்தை அழைப்புகளை வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் தொடா்ந்து நிராகரிப்பதோடு, தென் கொரியாவைத் தனது ‘பரம’ எதிரிநாடாகவும் அறிவித்து, அணு ஆயுத மற்றும் எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகிறாா்.

Summary

Peace talks with North Korea - South Korea

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.