லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்தோனேசியாவில் கட்டுக்குள் காட்டுத் தீ

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கா் செமேரு தேசியப் பூங்காவில் கடந்த வாரம் பரவிய காட்டுத்தீ தற்போது பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காட்டுத் தீ - சித்திரிப்பு

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:10 am IST

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கா் செமேரு தேசியப் பூங்காவில் கடந்த வாரம் பரவிய காட்டுத்தீ தற்போது பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், சில பகுதிகளில் தொடா்ந்து எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சுமாா் 900 ஹெக்டோ் (2,224 ஏக்கா்) பரப்பளவிலான நிலப்பரப்பு இக்காட்டுத் தீயில் கருகி நாசமாகியுள்ளன.

வறட்சிக் காலமான தற்போது இந்தோனேசியா முழுவதும் காட்டுத்தீப் பரவல் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இதன்காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால், சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.