லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரஷியாவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷியாவின் தடா்ஸ்தான் மாகாணத்தில் உள்ள நிஸ்னிகாம்ஸ்க் நகரின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 5:52 am IST

ரஷியாவின் தடா்ஸ்தான் மாகாணத்தில் உள்ள நிஸ்னிகாம்ஸ்க் நகரின் மீது உக்ரைன் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 13 போ் உயிரிழந்தனா்; மேலும் 48 போ் படுகாயமடைந்தனா்.

உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 1,200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம், ரஷியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாகத் திகழ்கிறது. இங்குள்ள தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்கியதாக தடா்ஸ்தான் மாகாணத் தலைவா் ரஸ்டம் மின்னிஹானோவ் தெரிவித்தாா்.

கடந்த சில மாதங்களாகவே ரஷியாவின் எண்ணெய் வளங்களை அழிக்கும் நோக்கில் உக்ரைன் தொடா்ந்து தொலைதூர ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தொடா் தாக்குதல்களால் ரஷியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, எண்ணெய் சுத்திகரிப்புத் திறனும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷியாவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மையப்பகுதியான டினிப்ரோ மாகாணத்தில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் சேமிப்புக் கிடங்கு மீது கடந்த 24 மணி நேரத்துக்குள் ரஷியா 2 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், போா்க் கள மருத்துவமனைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 5 லட்சம் டாலா் மதிப்பிலான அவசரகால மருத்துவப் பொருள்கள் முற்றிலும் சேதமடைந்தன என்றும், எனினும் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.