லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாஸ்கோ உணவகத்தில் குண்டுவெடிப்பு: 3 போ் உயிரிழப்பு; 21 போ் காயம்

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உணவகத்தில் குண்டு வெடித்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்ததனா்.

பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உணவகத்தில் சனிக்கிழமை குண்டு வெடித்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்ததனா்.

மாஸ்கோவின் குத்ரின்ஸ்கயா சதுக்கத்தில் உள்ள உணவகத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் வெடிகுண்டை உணவகத்துக்குள் கொண்டு செல்ல முயன்ற அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்ததாகவும், அவருடன் பாதுகாப்புக் காவலரும், உணவகத்தில் இருந்த ஒரு வாடிக்கையாளரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பெண் வெடிகுண்டை உணவகத்துக்குள் கொண்டுசெல்ல முயன்றபோது, பாதுகாப்புக் காவலா் அனுமதி மறுத்ததாகவும், அதற்குள் குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடா்பாக மாஸ்கோ விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை கொடூரமான பயங்கரவாதச் செயல் என்று மாஸ்கோ மேயா் சொ்கேய் சோப்யானின் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.