நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றது.
அதன் ஒரு முயற்சியாக சர்வதேச பூமி தினமான ஏப்ரல் 22 ஆம் தேதி, 'Your Name in Landsat' (லான்ட்சாட்டில் உங்கள் பெயர்) என்ற மெனுவை தனது வலைதளத்தில் நாசா அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாசாவின் லான்ட்சாட் துறை மூலமாக பூமியின் இயற்கை புகைப்படங்களை செயற்கைக்கோள்கள் உதவியுடன் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன.
நமது பூமியின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த காடுகள், மலைகள், பாலைவனம் என கோடிக்கணக்கான புகைப்படங்களை நாசா வைத்துள்ளது.
இந்த நிலையில், 'Your Name in Landsat' (லான்ட்சாட்டில் உங்கள் பெயர்) என்ற தளத்தில் பயனர்கள் அவர்களின் பெயரையோ, அல்லது அவர்களின் பிரியமானவர்களின் பெயரையோ பதிவிட்டால், எழுத்து வடிவில் உள்ள பூமியின் இயற்கைப் புகைப்படங்களை தொகுத்து பெயராக மாற்றி பயனர்களுக்கு வழங்கும்.
எப்படி உபயோகிப்பது?
கூகுள் போன்ற தேடுதல் தளத்தில் ’Your Name in Landsat’ எனப் பதிவிட்டால், நேரடியாக நாசாவின் ’Your Name in Landsat’ என்ற தளத்துக்கு பயனர்களை கொண்டு செல்லும். (https://science.nasa.gov/specials/your-name-in-landsat/)
அதில், A முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி பெயரை பதிவிட வேண்டும்.
பின்னர், நீங்கள் பதிவிடும் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் ஒத்திருக்கும் நிலவடிவங்களின் செயற்கைக்கோள் படங்களைத் தானாகவே தேடும்.
சில நொடிகளில், நீங்கள் பதிவிடும் பெயருக்கான முழு வரைப்படத்தையும் நாசா வழங்கும். அதனை பயனர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தற்போது உலகளவில் டிரெண்டிங்கில் இருக்கும் ‘Your Name in Landsat’ அம்சத்தை கோடிக்கணக்கானோர் ஆர்வத்துடன் அணுகி வருகிறார்கள்.
Summary
Join the Trend! Want Your Name on Earth's Landscape?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விமானம் ஓட்டும் அனுபவம்! கூகுள் குரோமில் பெறுவது எப்படி?

பூமியை நோக்கி சூரிய துகள்கள்! தென்னிந்திய மாநிலங்கள் மீது விழுமா?

மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா

தொகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து ராஜிநாமா: மரகதம் குமரவேல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

