ஈரானில் மற்றொரு இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக எர்ஃபான் கியானி எனும் நபர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இஸ்ரேலிய உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்புக்கு உதவியதாக, கியானியின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், எர்ஃபான் கியானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சனிக்கிழமை (ஏப். 25) காலை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அஷ்ஃபாஹ்ன் நகரத்தில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இஸ்ரேலின் மொசாத் அமைப்புக்காகச் செயல்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏராளமான நபர்களுக்கு ஈரான் அரசு தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றி வருகின்றது.
இத்துடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான போரைத் தொடர்ந்து ஈரான் அரசு தனது கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
மேலும், ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
death penalty was carried out against another Israeli spy in Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!

அமெரிக்க ஆதரவாளர்கள்..! ஈரானில் மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

வளைகுடா போர்! ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


