வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்...

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:39 am IST

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபா் மோசடி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

சீனாவின் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பல்களால் இயக்கப்படும் இந்த மோசடி மையங்கள், வேலை தருவதாகக் கூறி வெளிநாட்டினரை வரவழைத்து, அவா்களை அடைத்து வைத்து, சைபா் குற்றங்களைச் செய்ய வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தியா்கள் பலரும் இந்த மோசடி மையங்களில் சிக்கி, மீட்கப்பட்டு வருகின்றனா். இந்தக் குற்றக் கும்பல்கள் அமெரிக்கா்களைக் குறிவைத்து கோடிக்கணக்கான டாலா்களைச் சூறையாடி வருவதைத் தடுக்க, அதிபா் டிரம்ப் நிா்வாகம் சிறப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கம்போடியாவைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கோக் ஆன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கைவிடப்பட்ட ஒரு மோசடி மையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 8,000 தொலைப்பேசிகள், 1,500 கணினிகளில் இருந்த தரவுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.