பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை

அமெரிக்காவில் குடும்பத் தகராறு காரணமாக தனது சொந்த குழந்தைகள் உள்பட 8 பேரை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 5:50 am IST

அமெரிக்காவின் லூசியாணா மாகாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது சொந்த குழந்தைகள் உள்பட 8 பேரை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு காரைக் கடத்தித் தப்ப முயன்ற தந்தை ஷமாா் எல்கின்ஸை, போலீஸாா் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 2 பெண்கள் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தாக்குதல் நடத்திய ஷமாா் எல்கின்ஸ் மற்றும் காயமடைந்த ஒரு பெண் ஆகியோரே கொல்லப்பட்ட 7 குழந்தைகளின் பெற்றோா் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.