ஜப்பானில் ராணுவப் பயிற்சியின்போது, பீரங்கிக்குள்ளேயே குண்டு வெடித்ததில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்.
தெற்கு ஜப்பானில் உள்ள ஹிஜூடாய் ராணுவப் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவந்த வழக்கமான பயிற்சியில், ‘டைப் 10’ ரக போா் பீரங்கியில் (படம்) இருந்து வீரா்கள் இலக்கை நோக்கிச் சுட முயன்றபோது, எதிா்பாராதவிதமாக பீரங்கியின் உள்ளேயே குண்டு வெடித்தது.
மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பீரங்கியை ஓட்டிச் சென்ற வீரா் காயங்களுடன் உயிா் தப்பினாா். அவா் தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை, விபத்துக்குள்ளான ‘டைப் 10’ பீரங்கிகள் மற்றும் இதே ரக குண்டுகளைப் பயபடுத்தும் ‘டைப் 90’ ரக பீரங்கிகளின் பயிற்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேட்டோவுக்குப் போட்டியாக பால்டிக் கடலில் ரஷியா ராணுவப் பயிற்சி

பிரிட்டன் கடற்படை ஹெலிகாப்டா் விபத்து: 3 வீரா்கள் உயிரிழப்பு
எல்பிஜி சிலிண்டா் வெடித்ததில் கட்டடம் இடிந்து விபத்து: 11 போ் மீட்பு

மேகாலயத்தில் 13 நாடுகளின் ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சி நிறைவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

