தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஹோர்முஸ் நீரிணையை 6 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன; ஈரானுடன் பேச்சுவார்த்தை! - மத்திய அரசு அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை இந்தியாவின் 6 எரிபொருள் கப்பல்கள் கடந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது...

News image

ஹோர்முஸ் நீரிணை வழியாக 6 இந்திய கப்பல்கள் (கோப்புப் படம்) - ஏபி

Updated On :2 ஏப்ரல் 2026, 6:56 pm IST

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை 6 இந்திய எரிபொருள் கப்பல்கள் பத்திரமாகக் கடந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், தங்கள் அனுமதியின்றி வரும் கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், எல்.பி.ஜி. மற்றும் எல்.என்.ஜி. உள்ளிட்ட எரிபொருள்களை ஏற்றி வரும் 6 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பத்திரமாகக் கடந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் புதன்கிழமை (ஏப். 2) அன்று தெரிவித்துள்ளார்.

இத்துடன், கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. உள்ளிட்ட எரிபொருள்களுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கக் காத்திருக்கும் 18 இந்திய கப்பல்கள் குறித்து ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் அரசு நடத்தும் கூட்டத்தில் இந்திய வெளியுறவுச் செயலாளர் பங்கேற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Summary

Ministry of External Affairs has announced that six Indian fuel tankers have safely passed through Iran's Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.