நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எந்த கோயிலில் என்ன விசேஷம்? ஜூன் 19 முதல் 25 வரை

அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த கோயிலில் என்ன விசேஷம் என்று தெரிந்துகொள்வோம்..

News image
Updated On :12 மணி நேரங்கள் முன்பு

• சிதம்பரத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவத்தில் ஜூன் 21-தேர் உற்சவம், ஜூன் 22 -அதிகாலை 3 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ நடராஜர், அம்பாள் மகாபிஷேகத்தைத் தொடர்ந்து திருவாபரணஅலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலாக் காட்சி, ஜூன் 23 - இரவு முத்துப் பல்லக்கு நடைபெறும்.

• திருவள்ளூர் மாவட்டம், சேக்காடு கிராமத்தில் உள்ள சோமநாதீசுவரர் திருக்கோயிலில் ஜூன் 21-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அபிஷேகம், திருமுறைப் பாராயணம், அர்ச்சனை, பஞ்சபுராணம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.

• திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், பட்டம்பாளையம் அருள்மிகு அய்யனாரப்பன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஜூன் 21 காலை 9.35 மணிக்கு மேல் 10.45 மணிக்கு நடைபெற இருக்கிறது.

• சென்னை-127, மேடவாக்கம் சாலை, பொன்மார் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தியாகவினோதபெருமாள் திருக்கோயிலில் ஜூன் 21-ஆம் தேதி, 12 திருக்கோயில்களின் எம்பெருமான்கள் சகலஅலங்காரத்துடன் கருடவாகனத்தில் ஒரேமேடையில் காட்சியளிக்கும் துவாதஜ (12) கருடசேவை நடைபெறுகிறது.

• ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகில் தக்கோலம் அருள்மிகு மரகதவல்லி சமேத மாம்பழநாதர் கோயிலில் ஜூன் 21 மாங்கனித் திருவிழா மற்றும் மாணிக்கவாசகர் குரு பூஜை காலை 7 மணிமுதல் நடைபெறும்.

• ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், ஏ.தரைக்குடி அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரி சமேத அருள்மிகு ஸ்ரீ தரணீஸ்வரர் கோயிலில் ஜூன் 21 காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடைபெறுகிறது.

• திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் }கரூர் சாலை அம்மன் கோயில் வீதி அருள்மிகு ஸ்ரீ திருமலையம்மன் சுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேகம் ஜூன் 24 (புதன்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

• கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், பொகளூரில் அமைந்துள்ள பாலவிநாயகர், பாலமுருகன், கன்னிமார் கருப்பராய சுவாமி, வீரமாத்தியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஜூன் 24 காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

• காஞ்சிபுரம், அப்பாராவ் தெருவில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ கந்தப்பர் திருக்கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜூன் 24-இல் காலை 11.30 மணிஅளவில் நடைபெறுகிறது.

• சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகியநாதர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் ஜூன் 24, காலை 6.50 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் நடைபெற உள்ளது.

• மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமர் கோயில் பிரம்மோத்ஸவம் ஜூன் 24-இல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 26 } கருட சேவை, ஜூன் 28 } நாச்சியார் திருக்கோலம், ஜூலை 1} திருத்தேர், ஜூலை 3 - தீர்த்தவாரி, ஜூலை 7 } புஷ்ப பல்லக்கு.

• பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் அனுப்பர் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாலட்சுமி கோயிலில் ஜூன் 25 காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.