பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குழந்தை வேலப்பர்

பழனி மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் வட்டத்தில் அமைந்துள்ளது இயற்கை வளம் நிறைந்த பூம்பாறை.

Published On :7 ஆகஸ்ட் 2026, 4:27 pm IST

பழனி மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் வட்டத்தில் அமைந்துள்ளது இயற்கை வளம் நிறைந்த பூம்பாறை.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1920 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது ஆசிய அளவில் ஐந்தாவது அழகிய மலைக் கிராமம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை வடிவில் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் குழந்தை வேலப்பர் கோயில் இங்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. பழனி கோயிலுக்கும் முந்தையது. தலவிருட்சம், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மரம்.

பழனிமலை முருகரை நவபாஷாண சிலையால் பிரதிஷ்டை செய்த சித்தர் போகர், பூம்பாறை குழந்தை வேலப்பர் திருவுருவத்தையும் ஒன்பது வகையான அரிய மூலிகைகளைக் கொண்டு செய்துள்ளார்.

மணப்பேறு, மகப்பேறு என வேண்டிய வரம் தரும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் குழந்தை வேலப்பர். இவரை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பாவ வினைகளும் தீரும்.

அருணகிரிநாதர் இத்தலத்தின் வளத்தைப் போற்றி திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது.

இந்தப் பள்ளத்தாக்கு கிராமத்தின் மேல் காலை, மாலை வேளையில் வெண் பஞ்சு போன்ற மேகக் கூட்டம் படிந்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சி.

தரிசனத்துக்காக காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் பூம்பாறை முருகன் கோயில் கொடைக்கானலில் இருந்து 20 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

- ரெ.சுப்பாராஜூ, கோவில்பட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.