டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

உயிரே பணயம்!

அறிவியல் உலகில் முக்கியமான கண்டுபிடிப்பை எழுபத்து ஐந்து வயதான பேரி ஜேம்ஸ் மார்ஷல் நிகழ்த்தியுள்ளார்.

Published On :1 நவம்பர் 2026, 12:30 pm IST

அறிவியல் உலகில் முக்கியமான கண்டுபிடிப்பை எழுபத்து ஐந்து வயதான பேரி ஜேம்ஸ் மார்ஷல் நிகழ்த்தியுள்ளார். அனைவரும் ஒதுக்கியபோதும் தான் கண்டுபிடித்த உண்மையை உலக நன்மைக்காக தன் உயிரைப் பணயம் வைத்து நிரூபித்த மார்ஷல், அறிவியல் உலகில் ஓர் அபூர்வமான மனிதர்தான்!

ஆஸ்திரேலியாவில் கல்கோர்லி என்ற இடத்தில் பிறந்த பேரி மார்ஷல் மருத்துவப் படிப்பில் வெற்றி பெற்று, அறுவைச் சிகிச்சையிலும் தேர்ந்தார். அட்ரியன் என்ற பெண்மணியை மணந்த இவருக்கு, ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

1979-ஆம் ஆண்டு அவர் ராயல் பெர்த் மருத்துவமனையில் பதிவாளராகப் பொறுப்பேற்று, 'கேஸ்ட்ரிடிஸ்' எனப்படும் இரைப்பை வீக்கம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இரைப்பையில் உள்ள பாக்டீரியாக்களினால்தான் வீக்கம் உண்டாகிறது என்பதை அவர் கண்டறிந்தபோது, பலரும் இதை நம்ப மறுத்தனர். 'வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கான காரணம் அதிக அழுத்தமும், காரவகை உணவுகளுமே' என்று அனைவரும் நம்பினர்.

இருப்பினும், அவர் தனது கண்டுபிடிப்பை ஆய்வறிக்கையாக எழுதி, அதை இரைப்பை சம்பந்தமான ஆய்வு நடத்தும் ஆஸ்திரேலிய சங்கத்துக்கு அனுப்பினார். கடைசி பத்து சதவிகித அறிக்கையை ஒன்றாக அனைவரும் நிராகரித்தது மார்ஷலுக்கு அவமானமாகிவிட்டது. உடனே அவர் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

ஆய்வுக்காக, ஒரு சின்ன தட்டில் பாக்டீரியாக்களை நிரப்பி, அதை அப்படியே விழுங்கினார். தனது ஆய்வறிக்கையை நிரூபிக்க அவருக்கு வேறு வழி தெரியாமல், தன் உயிரைப் பணயம் வைத்து அப்படிச் செய்தார்.

'அல்சர்' எனப்படும் புண் வயிற்றில் உருவாக சில ஆண்டுகள் ஆகலாம் என்று நினைத்திருந்த மார்ஷலுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. மூன்றே நாள்களில் அந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு, எட்டே நாள்களில் இரைப்பை வீக்கம் ஏற்பட்டுவிட்டது. பதினான்காவது நாளில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற ஆரம்பித்தார்.

அவர் சொன்னது உண்மை என்பது புரிய ஆரம்பித்தது. வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கும் இதுதான் காரணம் என்பதை நிதர்சனமாக தன் உயிரைப் பணயம் வைத்து அவர் நிரூபித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதற்காக, மருத்துவத்துக்கான நோபல் பரிசை 2005-ஆம் ஆண்டில் அவர் பெற்றார்.

2007-ஆம் ஆண்டில் 'மார்ஷல் சென்டர்' என்ற ஆய்வு மையத்துக்கு அவர் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். விருதுகள் அவரைத் தேடி வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.