தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

கோடையில் வயிறு உப்பிசத்தை குறைக்க...

கோடை காலத்தில், இரவில் சாப்பிடும் உணவு செரிக்காது. வயிற்றில் நமச்சல் ஏற்படும். பலருக்கு வயிறு புஸ்ஸென்று இருக்கும். இதனை சமாளித்து வயிற்றை நல்லபடியாகப் பராமரிக்க இவற்றை பின்பற்றலாம்.

News image
Updated On :27 ஏப்ரல் 2025, 12:03 am IST

கோடை காலத்தில், இரவில் சாப்பிடும் உணவு செரிக்காது. வயிற்றில் நமச்சல் ஏற்படும். பலருக்கு வயிறு புஸ்ஸென்று இருக்கும். இதனை சமாளித்து வயிற்றை நல்லபடியாகப் பராமரிக்க இவற்றை பின்பற்றலாம்.

 ஊற வைத்த சீரகப் பானத்தைக் குடிப்பதால், உப்பிச வாயுவைப் போக்கலாம். ஜீரணத்துக்கும் வழி செய்யும்.

ஒம வாட்டரை தண்ணீரில் கலந்து குடித்தால் மறுநாள் காலை நமைச்சல் காணாமல் போய் விடும். மலச்சிக்கலையும் அகற்றும்.

பச்சையான உணவுகள் குளிர்ச்சியாக இருக்கும்போது அவற்றை தாமதமாகச் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும். வாயு சிக்கல் ஏற்பட்டு வயிறு உப்பிசம் வரவும் வாய்ப்பு உண்டு.

சாம்பார், சப்ஜி போன்றவற்றில் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடி சேர்க்கவும். குடலுக்கு உகந்த பாக்டீரியாக்கள் நிறைய உற்பத்தியாகி வாயுவை வெளியேற்றுவதுடன் உப்பிசம் ஏற்படுவதையும் தவிர்க்கும்.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி வயிறை மெதுவாக மசாஜ் செய்யவும்.இதுபெருங்குடல், அதன் வெளியே சிக்கியுள்ள பொருட்களை வெளியேற உதவும்.

பப்பாளி, அன்னாசிப் பழங்களில் பப்பேன், ப்ரோனமலைன் உள்ளது. இவை இயற்கையாகவே புரதத்தை உடைத்து ஜீரணத்துக்கு உதவுகிறது.

சுவருக்கு எதிராக படுத்துகொண்டு கால்களை தூக்கி சுவரில் சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.இந்த ஆசனம் குடலில் உள்ள இடைஞ்சல்களை வெளியேற்ற உதவும்.

வயிற்றில் லேசான சூடுபடுவதால் குடல் தசைகள் தளர்வடைந்து, தசைப் பிடிப்பை குறைத்து சிக்கிய வாயுவை வெளியேற்ற உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.