லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வாட்ஸ்ஆப் வெப்பில் புதிய சேவை

வாட்ஸ்ஆப் வெப்பில், இணைய தொலைபேசி விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது.

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

வாட்ஸ்ஆப் வெப்பில், இணைய தொலைபேசி விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது.

கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்கள், வாட்ஸ்ஆப் வெப் இல்லாமலேயே கூகுள் க்ரோம் பிரௌசரைப் பயன்படுத்தி இந்த விடியோ தொலைபேசி அழைப்புகளில் பங்கேற்கலாம்.

முன்பு, வாட்ஸ்ஆப் வெப் செயலி இருந்தால்தான், இணையதள தொலைபேசி சேவையைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது பிரௌசர்களில் விடியோ அழைப்புக்கான லிங்கை அனுப்பி பிறரை சேர வைக்கலாம்.

இந்த லிங்கைப் பெறுபவர்களின் கணினியில் வாட்ஸ்ஆப் வெப் செயலி இல்லாமலேயே இந்த விடியோ அழைப்புகளில் பேசலாம். மேலும், இந்த சேவையில் பல்வேறு புதிய அம்சங்களையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்ஆப் விடியோ அழைப்புகளை கைப்பேசியில் இருந்து கணினிக்கும், கணினியில் இருந்து கைப்பேசிக்கும் பேசிக் கொண்டிருக்கும்போதே இணைப்பைத் துண்டிக்காமல் மாற்றிக் கொள்ளலாம். குழு அழைப்புகளில் புதிதாக வரும் நபர்களைக் காத்திருக்க வைக்கும் 'வெய்ட்டிங் ரூம்' சேவையும் அறிமுகமாகி உள்ளது. குழு அழைப்பைத் தொடங்கியவர் அனுமதி அளித்தால், அவர் இணையலாம்.

மேலும், எந்தவித வெளிசப்தம் இடையூறு இல்லாமல் அழைப்புகளைப் பேசும் வகையிலும், ஹெச்டி விடியோ தரத்தில் விடியோ அழைப்புகளைப் பேசும் வகையிலும் புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன.

படிப்படியாக இந்தச் சேவைகள் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஜூம், கூகுள் மீட் ஆகிய இணையவிடியோ அழைப்பு சேவைகளுக்கு இணையாக தற்போது வாட்ஸ்ஆப் வெப் விடியோ அழைப்பும் குழுக் கூட்டங்களை நடத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.