திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தண்டபாணி, விஜய் டி.வி.யின் பிரபல நட்சத்திரமான தர்ஷாகுப்தாவுக்கு ஓவியங்களால் வரையப்பட்ட ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்த சொக்கனூரைச் சேர்ந்தவர் எஸ்.தண்டபாணி(21), இவர் தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி காஸ்ட்யூம் டிசைன் அண்டு ஃபேஷன் படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கே.சந்திரசேகர்- சுப்புலட்சுமி கைத்தறி நெசவு செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
மேலும், சந்திரசேகர் பகுதிநேர பெயிண்டராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,ஃபேஷன் டிசைனிங் துறையில் ஆர்வம் உள்ள தண்டபாணிக்கு விஜய் டி.வி. நடிகை தர்ஷாகுப்தாவுக்கு லெஹங்கா போன்ற ஆடையை வடிவமைத்து அனுப்பிவைத்துள்ளார்.
இதுகுறித்து தண்டபாணி கூறியதாவது:
சிறு வயது முதலே ஃபேஷன் டிசைனிங் எனப்படும் ஆடை வடவமைப்புத் துறையில் அதீத ஈடுபாடு இருந்து வந்தது. தற்போது விடுமுறையில் சாமந்திப்பூவை மையமாகக் கொண்டு லெஹங்கா ஆடை ஒன்றை 2 நாள்களில் வடிவமைத்துள்னேன். சென்னையில் சினிமாதுறையில் உதவி ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தபோது விஜய் டி.வி. நடிகை தர்ஷாகுப்தாவின் அறிமுகம் கிடைத்தது. ஆகவே, அவருக்கு அந்த ஆடையை அனுப்பிவைத்தேன்.
சாமந்திப்பூவை மையமாகக் கொண்டு நான்வடிவமைத்துள்ள இந்த ஆடை மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தர்ஷாகுப்தா அண்மையில் பதிவிட்டிருந்தார். அப்போது இந்த ஆடை டிரெண்டியாக உள்ளதாகக் குறிப்பிடிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

