தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

கண்ணுக்குள் வேர்விட்டு முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!

கண் திசுக்களில் வேரூன்றி முளைத்த விதையால் ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம் பற்றி..

eye sight

பாதிக்கப்பட்ட கண் - பிரதி படம் - கோப்புப்படம்.

Published On :30 அக்டோபர் 2026, 5:58 pm IST

வீடுகளில் மண்ணை நிரப்பி விதைப் போட்டு தண்ணீர் ஊற்றினால் வளராத செடி, எதிர்பாராதவிதமாக ஒருவர் கண்ணுக்குள் சென்று முளைக்கத் தொடங்கியிருக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ரஷியாவின் யகுடியா மாகாணத்தைச் சேர்ந்த 42 வயது மனிதருக்குக் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற போது, அவரது கண்ணை சோதித்த மருத்துவருக்குக் கடும் அதிர்ச்சி.

அவரது கண்ணில் பார்வைக் குறைபாடோ சதை அல்லது புரையோ வளர்ந்திருக்கவில்லை. மாறாக, நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏதோ ஒரு வழியில் கண்ணுக்குள் நுழைந்த ஒரு விதை, அவரது கண் திசுக்களில் தன்னுடைய வேரைப் பரப்பி, செடியாக வளர தொடங்கியிருந்ததைப் பார்த்த மருத்துவர் நிச்சயம் மயக்கமடைந்திருக்க வாய்ப்பு அதிகம்.

மக்ஸிம் ஸ்லெப்சோவ்-விடம் இது பற்றி விசாரித்த போது, கோடைக்கால விடுமுறையைக் கழிக்க வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றிருந்தபோது, ஒரு செடியின் கிளை அவரது கண்களில் குத்தியிருக்கிறது. அப்போதிருந்து கண்ணில் எரிச்சல், வலி இருந்துள்ளது. கண்ணுக்குள் பட்ட செடியின் ஒரு குச்சியை வெளியே எடுத்திருந்த போதும், யாருக்கும் தெரியாமல், அந்த குச்சியைப் பயன்படுத்தி கண்ணுக்குள் நுழைந்த ஒரு விதை, நிரந்தரமாக அங்கேயே பதுங்கிக் கொண்டது.

குச்சியை அகற்றிய பிறகும் கண்களில் வலி, எரிச்சல், கடும் தலைவலி ஏற்பட்டிருக்குகிறது. இதற்கும், அந்த குச்சிதான் காரணம் என்ற நினைத்திருக்கிறார். ஆனால், குச்சி பாவம், அதுதான் வெளியே வந்துவிட்டதே. பிறகு மருத்துவமனையை நாடி முறைப்படி சோதனை செய்திருக்கிறார்.

அப்போதுதான், கண்ணின் வெள்ளை திசுக்களை ஒட்டிப் பிடித்திருந்த விதையானது, ஏன் சும்மா இருக்க வேண்டும்? அப்படியே வளர்ந்து செடியாகிவிடலாமே, இடம் பாதுகாப்பானதாகவும் இருக்கிறதே, தேவைப்பட்டால் கண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்ததோ என்னவோ, வேர்களை ஊன்றி விதை முளைத்து இரண்டு இலையும் விட்டிருக்கிறது. பூ மலர்வதற்குள் நல்ல வேலை மக்ஸிம் கண்டுபிடித்து விட்டிருந்தார். இல்லையென்றால் கண்களில் பூ விழுந்துவிட்டது என்றுதான் சொல்லியிருப்பார்கள்.

அந்த விதையின் வேரானது கிட்டத்தட்ட 3 மி.மீ. ஆழத்துக்கு வேரூன்றி இருக்கிறது. ஒருவேளை, அவர் பரிசோதனை செய்யாமல் விட்டிருந்தால், வெள்ளை திசுவே செயலிழந்து பார்வை பறிபோனதுடன் சொல்ல முடியாத துயரங்கள் நேரிட்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தற்போது செடி வேருடன் பிடுங்கப்பட்டு விட்டது, மக்ஸிம் குணமடைந்து வருகிறார். கண்ணுக்குள் வளர்ந்த தலைவலி விட்டிருக்கிறது. ஒருவேளை மக்ஸிமிடம் அந்த செடியைக் கொடுத்து தனிப்பட்ட முறையில் தன் ரத்தம் என்று வளர்த்து ஆளாக்கிக் கொள்ள சொல்லியிருக்கலாம் மருத்துவர்கள்.

Summary

A seed that took root and sprouted inside an eye! A tragedy that befell a Russian man!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.