இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டபோது, அங்கிருந்த மனிதர்கள் மற்ற பொருள்களின் நிழல்கள் தரையில் ஒட்டிக்கொண்டன. 85 ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் அந்த நினைவுகளோடு நிழல்களும் மறையாமல் காட்சியளிக்கிறது.
உலகையே உலுக்கிய ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் புகைப்படங்களைப் பார்த்த எவர் ஒருவருக்கும், அங்கு தரையிலும் சுவரிலும் மனிதர்களின், சைக்கிள் மற்றும் பிற பொருள்களின் நிழல்களும் அப்படியே ஒட்டியிருப்பதைப் பார்க்கும்போது ஒரு சொல்ல முடியாத கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜப்பானின் மிகப்பெரிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. அப்போது அதன் நேரடி பாதிப்புக்கு உள்ளாகாத, ஆனால், வெப்பத்தை உணர்ந்த நகரங்களில், மனிதர்களின் நிழல்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன.
காரணம் பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டதில் கிடைத்த பதில், ஒவ்வொரு அணுக் குண்டும் வீசப்பட்டபோது, அதிலிருந்து பயங்கர வெளிச்சம் மற்றும் வெப்பம் அப்பகுதி முழுக்க பரவியிருக்கும். ஆனால், ஒரு பொருளோ, மனிதர்களோ அதன் பாதையை தடுக்கும்போது, அவர்கள் மீதே வெளிச்சமும் வெப்பமும் சென்றிருக்கும். ஆனால், தடையில்லாத இடங்கள் வழியாகச் சென்ற வெளிச்சம் - வெப்பம் தரை அல்லது சுவர் பகுதியை வெண்மையாக்கியிருக்கும். ஆனால், ஒரு மனிதரால் மறைக்கப்பட்டு வெளிச்சம் - வெப்பம் படாத இடம், அவரது நிழல் விழுந்து கிடந்த இடம் அப்படியே அதே நிறத்தில் இருந்திருக்கும். அருகில் இருக்கும் இடங்கள் வழக்கத்தை விட வெண்மையாக மாறியதால், நிழல் விழுந்த இடம் மட்டும் சற்று கருப்பாக மாறியதால், அந்த நிழல் பகுதி நிரந்தரமாக நின்றுவிட்டது.
இந்த அணுகுண்டின் நேரடி வீச்சினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சாம்பலாகிப் போன நிலையில், தொலைவில் வெப்பமும் வெளிச்சமும் பட்ட இடங்களில்தான் இந்த நிழல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டில் யுரேனியம் 235 மற்றும் ப்ளுட்டோனியம் 239 பயன்படுத்தப்பட்டு, அதிலிருந்து கடுமையான வெப்பமும், குறைந்த வெப்ப அலைகளான கம்மா ரேடியேஷனாக நகரம் முழுவதும் பரவியிருக்கிறது.
செல்லப்பெயர் வேறு?
ஹிரோஷிமா மீது ஆகஸ்ட் 6ஆம் தேதி வீசப்பட்ட அணுகுண்டின் செல்லப் பெயர் லிட்டில் பாய், நாகசாகி மீது 9ஆம் தேதி வீசப்பட்ட அணுகுண்டின் செல்லப் பெயர் ஃபேட் மேன் என்று தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.
Summary
About the human shadows cast by the atomic bomb dropped on Hiroshima and the nicknames given to atomic bombs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிறரை உயர்த்தும் மனம் கொண்டவர்கள் மகர ராசியினர்!
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


