பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான ஸெரோதா இணையதளத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் நிர்வாகி நிதின் காமத், மிகப்பெரிய ரகசியம் ஒன்றை மக்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது, தான் தன்னுடைய செல்போன்களில், வங்கிகளின் மொபைல் செயலிகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதே இல்லை என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ஏராளமானோர், ஜிபே, போன் பே மட்டுமல்லாமல், வங்கிகளின் செயலிகளையும் சகட்டுமேனிக்கு செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டு, பணத்தை தண்ணீராகச் செலவழித்துக் கொண்டிருக்கும் நிலையில், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய வழிகாட்டும் ஸெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரே இவ்வாறு சொல்லியிருப்பது பெரும்பாலானோருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் வங்கிகளின் மொபைல் பேங்கிங் செயலிகளை என்னுடைய செல்போனில் பயன்படுத்துவதே இல்லை, பெரும்பாலான வங்கி செயலிகள் கோரும், தொடர்பு எண்களை பயன்படுத்துவோம், கேமராவை பயன்படுத்துபோம் என்பது போன்ற கட்டாய அனுமதிகள் ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை.
உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் தலைவிரித்தாடும் நிலையில், இதுபோன்ற வங்கி செயலிகள், செல்போனின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாங்களே எடுத்துக் கொள்வோம் என்று கட்டாய அனுமதிகளைக் கோருவது மிகவும் விநோதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வங்கிச் செயலி, அது செயல்பட குறைந்தபட்சம் என்ன தேவையோ, அதற்கான அனுமதிகளை மட்டுமே பெற வேண்டும். தேவையற்ற அனுமதிகளைப் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறார்.
என்னுடைய செல்போனிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்ப, அழைப்பு விடுக்க, தொடர்பு எண்களைப் பயன்படுத்த வங்கி செயலிகளுக்கு நான் ஏன் அனுமதி வழங்க வேண்டும். பாதுகாப்பு என்ற பெயரில், செல்போனுக்குள் ஊடுருவும் அனுமதிகளைக் கோராமல் இருப்பதுதான், உண்மையில், இணையப் பாதுகாப்பிற்கான உலகளாவிய அளவுகோலாக இருக்கிறது. இதுதான், குறைந்தபட்ச அணுகுமுறை என்று வரையறுக்கப்படுகிறது.
மேலும், தங்களுடைய ஸெரோதா நிறுவனத்தின் செயலிகள் தேவையற்ற அனுமதிகளை வாடிக்கையாளர்களிடம் கோருவதில்லை.தங்களது முதல் மொபைல் செயலியான கைட், ஒரு அனுமதியும் கோருவதில்லை, அனைத்துமே தேவையெனில் கொடுக்கலாம் என்பது போலத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு அனுமதி வழங்க விருப்பமில்லை எனில், அந்த அனுமதியை வழங்க வேண்டாம், ஸெரோதாவும் அதைத்தான் செய்கிறது. அதனால்தான் லட்சக்கணக்கானோர் எங்களை நம்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Summary
Businessman Nitin Kamath says he doesn't use banking apps.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலையில்லை - மு. அப்பாவு

பெண் கொலை புரிந்த நன்னன்
ரயில் சிநேகம்

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


