நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் அட்டையை பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள். ஒருவருக்கு ஒரு பான் அட்டைதான். ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் அறிந்தும் அறியாமலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கலாம்.
ஒரு பத்து இலக்க நிரந்தர கணக்கு எண்களைக் கொண்டதுதான் பான் அட்டை, ஒருவர் தன்னுடைய பெயரில் பான் அட்டையை வாங்கிவிட்டால், அந்த எண்தான், கடைசி வரை அவருடைய பான் எண்.
ஒரு சிலரோ அல்லது நிறுவனமோ, சட்டவிரோதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கலாம். ஒருவேளை, வருமான வரித்துறையினரால் இது கண்டுபிடிக்கப்பட்டு பிடிபட்டால் நிச்சயம் கடும் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டு பான் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருமே மோசடியாளர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால், தவறுதலாக ஒருவருக்கு இரண்டு பான் அட்டைகள் வழங்கப்படலாம். ஆனால், அதனை திரும்ப அளிக்க சிலர் தவறியிருப்பார்கள்.
ஒரு முறை பான் அட்டைக்கு விண்ணப்பித்து கிடைக்காமல், திரும்பத் திரும்ப விண்ணப்பிப்பதால் இது நேரலாம்.
திருமணமான பெண்கள், கணவர் பெயருடன் பான் அட்டை பெற விரும்பினால், புதிதாக விண்ணப்பிக்கக் கூடாது, இருக்கும் பான் அட்டையில்தான் மாற்றம் செய்ய வேண்டும். இது பலருக்கும் தெரியாது.
சிலர், மோசடிகளில் ஈடுபடுவதற்காக தங்களது பெயர்களில் விவரங்களை மட்டும் மாற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வாங்கிக் கொள்வார்கள்.
தற்போது டிஜிட்டல் மயமான நிலையில், ஒருவருக்கு இரண்டு பான் அட்டைகள் வழங்குவது குறைந்துவிட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பது வருமான வரிச் சட்டப்பிரிவு 139ஏ குற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும், சட்டப்பிரிவு 272பி-ன் கீழ், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், ஒருவர் இரண்டு பான் அட்டைகளை வைத்திருந்தால் அது குறித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும், தவறான தகவல்களை கொடுத்திருந்தால் அதற்கும் வாய்ப்பு உள்ளது. பான் அட்டை வைத்திருப்பவர்கள் கொடுக்கும் விளக்கத்தைப் பொருத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அபராதம் விதிப்பார்கள்.
என்னென்ன சிக்கல்?
வரியைக் குறைத்துக் காட்ட சிலர் இரண்டு பான் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்ற சந்தேகம் உள்ளது. உண்மை என கண்டறியப்பட்டால், வருமான வரித்துறை இதுபோன்றவர்களை எச்சரித்து தண்டனைக்கும் வழிவகுக்கலாம்
வங்கிக் கணக்கு தொடங்குதல், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தல் போன்ற பணிகளின்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பது சிக்கலை ஏற்படுத்தலாம்.
வங்கியில் கடன் வாங்குவது, கிரெடிட் ஸ்கோர் அறிவது போன்றவற்றின்போது, ஒருவர் 2 பான் அட்டைகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது மோசடியாளர்கள் என்ற முத்திரை பதியலாம்.
Summary
Since holding more than one PAN card is an offense, if that is the case...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரண்டு நோயாளிகளுக்கு ஒரு படுக்கை! அரசு மருத்துவமனையில் நேயாளிகள் அவதி!

தினமும் 2 முட்டைகள் சாப்பிடலாமா? என்னாகும்?
வழிப்பறி திருடா்களை விரட்டிப் பிடித்த போக்குவரத்து காவலா்கள்!

எண் மறைக்கப்பட்ட பாதுகாப்பான ஆதார் அட்டை - முழு விவரம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

