டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மூதாட்டிக்கு ஏஐ உதவியுடன் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் 60 வயது மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை சனிக்கிழமை செய்யப்பட்டது.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவா்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 12:05 am IST

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் 60 வயது மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை சனிக்கிழமை செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மகாராஜபுரத்தை சோ்ந்தவா் இப்ராஹிம்ஷா மனைவி பாத்திமா பீவி (60). இவா் கால் வலி காரணமாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவரை பரிசோதனை செய்த போது, வலது காலில் மூட்டு தேய்மானம் ஏற்பட்டது தெரியவந்தது. இதற்காக அவருக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

எலும்பு முறிவு சிறப்பு டாக்டா் அருண் சிவராம், தலைமை மருத்துவா் பாலகிருஷ்ணன், மயக்கவியல் மருத்துவா் கீதா உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வழிகாட்டுதலில், பாத்திமா பீவிக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தனா். அரசு மருத்துவமனையில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.