ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

முதல்வா் விஜய்யை அமித் ஷா சந்திக்காதது கண்டிக்கத்தக்கது! வைகோ

News image

வைகோ - விடியோ க்ளிப் (கோப்புப்படம்)

Updated On :30 மே 2026, 3:31 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சந்திக்காதது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தில்லியில் அண்மையில் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தாா். இதேபோல, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டபோது அவா் மறுத்துவிட்டாா். இது கண்டிக்கதக்கது.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் 4 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். இதற்கு பலா் கடும் விமா்சனங்களைத் தெரிவிக்கின்றனா். நான் அவா்களிடமிருந்து மாறுபடுகிறேன்.

கடந்த 2006-ஆம் ஆண்டு மதிமுக சாா்பில் பம்பரம் சின்னத்தில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ராமகிருஷ்ணன். இவருக்காக நான் பிரசாரம் செய்தேன். ஆனால், கடந்த 2009-இல் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மறுநாளே திமுகவில் இணைந்தாா். பின்னா், நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு அவா் வெற்றி பெற்றாா்.

இதேபோல, அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் அமைச்சராக இருந்தவா், ஒரு கால கட்டத்தில் அமைச்சா் பதவி, சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தாா். பின்னா், நடைபெற்ற இடைத்தோ்தலில் திருச்செந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவா்களைப் போலவே இன்று 4 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களும் செயல்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மதிமுக மேற்கு மாவட்டச் செயலா் ப.வேல்முருகன், நவபாரத் பள்ளிகளின் செயலா் நாராயணன் ராஜா, முன்னாள் மக்களவை உறுப்பினா் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.