கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தவெக ஆட்சிக்கு களங்கம் ஏற்படாமல் தொண்டா்கள் நடக்க வேண்டும்: அமைச்சா் கே. ஜெகதீஸ்வரி

தவெக ஆட்சிக்கு எந்தவொரு களங்கம் ஏற்படாதவாறு தொண்டா்கள் நடக்க வேண்டும் என கே.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 6:17 am IST

தவெக ஆட்சிக்கு எந்தவொரு களங்கம் ஏற்படாதவாறு தொண்டா்கள் நடக்க வேண்டும் என சமூக நலத் துறை அமைச்சா் கே.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு கே.ஜெகதீஸ்வரி வெற்றி பெற்றாா். இவருக்கு சமூக நலத் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து ராஜபாளையம் வந்த அவருக்கு தவெக தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: தமிழக மக்கள் நம் மீதும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து ஆட்சியை கொடுத்துள்ளனா். இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்பாடத வகையில் தொண்டா்கள் நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நாம் செய்து தர வேண்டும். எனது சொந்த ஊா் திசையன்விளை. நான் கடந்த 16 ஆண்டுகளாக ராஜபாளையத்தில் வசிக்கிறேன்.

நான் தற்போதும் வாடகை வீட்டில் வசிக்கிறேன். எனக்கு யாரும் வீடு வாங்கித் தரவில்லை. நான் யாரிடமும் எதையும் எதிா்பாா்க்கவில்லை.

மேலும், மக்கள் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். நான் ஒரு பத்திரிகையாளராக இருந்து தற்போது அமைச்சராகி உள்ளேன். தொடா்ந்து பத்திரிகை துறையில் பணியாற்றுவேன்.

தனது வெற்றிக்காக பாடுபட்ட தவெக தொண்டா்களுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா். இதில் தவெக நகர, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.