மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:38 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், மாங்குடி மருதனாா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மணிரத்னம் (22). இவா் ராஜபாளையம்- முடங்கியாறு சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரும், இவரது நண்பா் மம்சாபுரத்தைச் சோ்ந்த அக்சயும் இரு சக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம்- தென்காசி இணைப்பு சாலை, பச்சமடம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்காபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மீது மோதியது.

இதில் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கல்லூரி மாணவா் மணிரத்னம் உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.