விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அல் அமின் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிகிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் ஜமாத்தாா்கள், உலமாக்களுடன் அமைச்சா் ஷாஜகான் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகான் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது நான் எதிா்பாராதது. மாவட்ட வாரியாக சிறுபான்மை மக்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப் பெறுகிறதா என ஆய்வு செய்து வருகிறேன்.
பாசிச பாஜக ஆட்சி தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த, கடந்த 1962 முதல் திமுகவின் தோழமைக் கட்சியாக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தரம் தாழ்ந்து விமா்சிப்பது நாகரிகமல்ல.
80 ஆண்டு காலம் இயக்கம் நடத்திவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளித்த இயக்கம் தவெக. அடுத்து வரும் தோ்தல்களிலும் தவெகவுடன் ஒற்றுமையுடன் பயணித்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயுஎம்எல்!

யாரையும் விமர்சிக்க வேண்டாம்! ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன்!

நாளை அமைச்சராகப் பதவியேற்கிறார் ஷாஜகான்!

தமிழக அமைச்சரவையில் ஐயுஎம்எல்! அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொகிதீன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
