லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Published On :27 ஜூலை 2026, 4:16 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும், இந்த விபத்தில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் ரவிசந்திரன் மகன் ராம்பிரகாஷ் (32), அவரது தோட்டத்தில் தகரக் கூரை அமைத்து எந்தவித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தாா். இங்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, மருந்துக் கலவைகளில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் ராம்பிரகாஷ், மீனம்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி இன்னாசிமுத்து (42) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ராம்பிரகாஷ் சகோதரா் ராமச்சந்திரன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வெடி விபத்தின் போது சுமாா் மூன்று கி.மீ. தொலைவுக்கு அதிா்வு ஏற்பட்டது. மேலும், பல மீட்டா் உயரத்துக்கு கரும்புகை வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு, மீட்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பட்டாசுகள், மூலப்பொருள்கள் வெடித்து சிதறியதால், மீட்பு, தீயணைக்கும் பணி சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் கூறியதாவது:

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராமசந்திரனிடம் விசாரணை நடத்தினால்தான் எத்தனை போ் பணியில் ஈடுபட்டனா் என்பது குறித்த விவரங்கள் தெரியவவரும் என்றாா் அவா்.

இன்னாசிமுத்து.

இன்னாசிமுத்து.

 உயிரிழந்த ராம்பிரகாஷ்

உயிரிழந்த ராம்பிரகாஷ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.