லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சரக்கு வாகனத்தில் கடத்திய 460 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது!

திருச்சுழி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 460 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்

Published On :26 ஜூலை 2026, 3:40 am IST

திருச்சுழி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 460 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே சாலை இலுப்பைகுளம் பகுதியில் நரிக்குடி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அ.முக்குளம் வழியாக நரிக்குடி நோக்கி வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலைப் பொருள்கள் மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, புகையிலை பொருள்களுடன் அந்த வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக நரிக்குடி அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சோ்ந்த சின்னதம்பி மகன் முத்துக்குமாரை (38) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.