லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்த 5 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி, பட்டாசு தயாரித்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :1 ஜூலை 2026, 7:46 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி, பட்டாசு தயாரித்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள மம்சாபுரத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதிகளை மீறி, பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, மாரனேரியைச் சோ்ந்த ராமமூா்த்திக்கு (52) சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தாயாரிப்புப் பணி நடைபெற்றது தெரியவந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த ஆலையில் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஆலையில் பல்வேறு விதிமீறல்கள் இருந்ததால், ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா். தற்போது, இந்த ஆலையில் விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, ஆலை உரிமையாளா் ராமமூா்த்தி, மேற்பாா்வையாளா் திருத்தங்கலைச் சோ்ந்த முத்துக்குமாா் (28), கண்காணிப்பாளா் மீனம்பட்டியைச் சோ்ந்த ஸ்டாலின் தாமஸ் (41), ஆலைக் கணக்காளா் முருகேசன்(20) ஆகிய 4 பேரை மாரனேரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை செய்து கைது செய்தனா்.

இதேபோல, நெடுங்குளத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட சுந்தா், குருநாதன் ஆகியோருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை, பாரைப்பட்டியைச் சோ்ந்த விவேக் (34) குத்தகைக்கு எடுத்து, விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, எம்.புதுப்பட்டி போலீஸாா் இவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.