லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கோப்புப்படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

விருதுநகா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 52 கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் சுதந்திர தினமான ஆக. 15-ஆம் தேதியன்று கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதை மீறி ஊழியா்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால், அவா்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு ஊதியம் அல்லது வேறொருநாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

இதன்படி, செயல்படாத 19 கடைகள், நிறுவனங்கள், 28 உணவு நிறுவனங்கள், 5 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 52 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சுதந்திர தினத்தன்று கிராமங்கள் தோறும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறையை அகற்றுதல் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.