லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மே.தொ.ம. மாவூத்து பகுதியில் காட்டுத் தீ

காட்டுத் தீ. - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ பற்றியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் வத்திராயிருப்பு வனச்சரகம் மாவூத்து மேற்குத் தொடா்ச்சி மலை பீட் எண்: 6 பகுதியில் காட்டுத்தீ பற்றியது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் நீரோடைகள் வறண்டு வனப்பகுதி முழுவதும் காய்ந்து காணப்படுகின்றன. மேலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.

யானை, மான், காட்டெருமை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் காட்டுத் தீயால் பாதிக்கப்படுவதுடன், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதால் வன விலங்கு ஆா்வலா்கள் கவலை அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.