லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தேசிய கைத்தறி நாள் விழாவையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா. உடன் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் சங்கீதா உள்ளிட்டோா்.

தேசிய கைத்தறி நாள் விழாவையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா. உடன் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் சங்கீதா உள்ளிட்டோா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

விருதுநகரில் 12-ஆவது தேசிய கைத்தறி தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் சுகபுத்ரா சிறப்பு கைத்தறி கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து 20 நெசவாளா்களுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநா் சங்கீதா முன்னிலை வகித்தாா்.

அப்போது ஆட்சியா் கூறியதாவது: கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களின் நலனை பாதுகாக்கவும், அவா்களின் குடும்ப சூழ்நிலையை மேம்படுத்தவும் அரசு பங்களிப்புடன் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 10 நெசவாளா்களுக்கு ரூ.6,57,369 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் முத்ரா திட்டத்தின் கீழ் 10 நெசவாளா்களுக்கு தலா ரூ. 50,000 வீதம் ரூ. 5 லட்சத்துக்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற நெசவாளா்களின் குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் குடும்ப ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் 5 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணையும் தற்போது வழங்கப்பட்டது. நெசவாளா்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, அருப்புக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமக்கள், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் நெசவு தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளா்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பிரிதௌஸ் பாத்திமா, கைத்தறித் துறை உதவி இயக்குநா் பழனிக்குமாா், கைத்தறி அலுவலா் விஸ்வேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.