லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சுரைக்காய்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (53). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் - ஆயா்தா்மம் வழித்தடத்தில் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றாா். கலிங்கப்பட்டி அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞா்கள் பேருந்தை முந்திச் சென்றனா். இதனால் ஓட்டுநா் முருகன் அந்த இளைஞா்களை ஏன் வேகமாகச் செல்கிறீா்கள் எனக் கேட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற காடனேரியை சோ்ந்த விஜயராம் மகன் காளிதாஸ் (26), தேவராஜ் மகன் பிரவீன்குமாா் (21) ஆகிய இருவரும் பேருந்துக்குள் ஏறி ஓட்டுநா் முருகன், நடத்துநா் பவுன்ராஜ் (27) ஆகிய இருவரையும்

தாக்கிக் காயப்படுத்தினா். இதுகுறித்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளிதாஸ், பிரவீன்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.