மும்பை: எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் அதித செலவுகள் உள்ளிட்டவையை தெரிவித்து, ஏர் இந்தியா தனது விமான சேவையை சமீபத்தில் குறைத்தது.
இதனையடுத்து, ஜூலை 15 முதல் தொடங்கவுள்ள மும்பை மற்றும் அபுதாபி இடையிலான நேரடி விமானங்களுக்கான முன்பதிவை, விமான நிறுவனத்தின் இணையதளம், மொபைல் செயலி மற்றும் பிற முக்கிய தளங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று அறிவித்தது.
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கும் அபுதாபிக்கும் இடையிலான இந்த நேரடி விமான சேவையின் தொடக்கத்தால், மகாராஷ்டிர விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மாறியது.
ஜூலை 15 முதல் வாரத்திற்கு இரண்டு சேவையும், பிறகு ஜூலை 29 முதல் வாரத்திற்கு மூன்று சேவைகளாகவும் அதிகரிக்கப்படும்.
இந்த வழித்தடம் மூலம், நவி மும்பையிலிருந்து அபுதாபி, பெங்களூரு மற்றும் தில்லி ஆகிய இடங்களை நேரடியாக இணைக்கும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு 30 விமானங்களை இயக்கும்.
மகாராஷ்டிரத்தில் தனது செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் தெரிவித்துள்ள விமான நிறுவனம், மும்பையிலிருந்து வாரத்திற்கு 95 க்கும் மேற்பட்ட விமானங்களையும், புனேவிலிருந்து 100 க்கும் மேற்பட்ட விமானங்களையும், நாக்பூரிலிருந்து வாரத்திற்கு 14 விமானங்களையும் இயக்குவதாகத் தெரிவித்துள்ளது.
Summary
Air India Express said bookings for Navi Mumbai International Airport and Abu Dhabi, starting on July 15.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு!

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

ஏர் இந்தியா விமான விபத்து முதலாண்டு நினைவு நாள்! பாதிக்கப்பட்டோர் நிலை என்ன?

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: உள்நாட்டு விமான சேவையை குறைக்க ஏர் இந்தியா முடிவு!!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


