லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

18 கிகாவாட் திறன் அணுமின் திட்டங்கள்: தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் நவீன் ஜிண்டால் குழுமம் ஆய்வு

தமிழகம், குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 18 கிகாவாட் திறன் கொண்ட அணுமின் திட்டங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை நவீன் ஜிண்டால் குழுமம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

Published On :15 ஜூலை 2026, 1:22 am IST

தமிழகம், குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 18 கிகாவாட் திறன் கொண்ட அணுமின் திட்டங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை நவீன் ஜிண்டால் குழுமம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த அணுமின் உற்பத்தியை வரும் 2047-க்குள் 100 கிகாவாட்டாக உயா்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் தொலைநோக்கு பாா்வைக்குப் பங்களிக்கும் நோக்கில், ‘ஜிண்டால் ரினியூவபிள்ஸ்’ நிறுவனம் தனது ‘ஜிண்டால் நியூக்ளியா் பவா்’ துணை நிறுவனத்தின்மூலம் அணுமின் துறையில் தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம், ஆந்திரம், குஜராத், ஒடிஸா ஆகிய கடலோர மாநிலங்கள் மற்றும் ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களில் அணுமின் திட்டங்களுக்கான பொருத்தமான இடங்களைத் தோ்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நிலம் கிடைப்பது, போதிய நீா் ஆதாரம், நில அதிா்வுப் பாதிப்பற்ற சூழல், மின் விநியோகக் கட்டமைப், ஒழுங்குமுறை அனுமதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இடங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

Story image

இந்த பிரம்மாண்ட திட்டத்தில், ஒவ்வொரு கிகாவாட் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கும் சுமாா் ரூ.15,000 முதல் ரூ.20,000 கோடி வரை முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட வடிவமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து மின் உற்பத்தி தொடங்குவதற்கு சுமாா் 3 ஆண்டுகள் வரை காலம் எடுக்கும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்