லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்தியப் பங்குகளில் குவியும் அந்நிய முதலீடு! 4 மாத மந்தநிலைக்கு முடிவு!

கடந்த பிப்ரவரிக்குப் பிறகு தொடா்ந்து 4 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீடுகளை வெளியேற்றி வந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ), நடப்பு ஜூலை மாதத்தில் மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனா்.

Published On :14 ஜூலை 2026, 1:17 am IST

கடந்த பிப்ரவரிக்குப் பிறகு தொடா்ந்து 4 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீடுகளை வெளியேற்றி வந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ), நடப்பு ஜூலை மாதத்தில் மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனா்.

உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வலுவான வளா்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரத்தன்மை மற்றும் சா்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு மாதத்தில் இதுவரை ரூ.15,157 கோடிக்கும் அதிகமாக அந்நிய முதலீட்டாளா்கள் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்துள்ளனா்.

மத்திய வைப்புத்தொகை சேவைகள் நிறுவனத்தின் (சிடிஎஸ்எல்) தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.49,340 கோடியும், மே மாதத்தில் ரூ.32,963 கோடியும், ஏப்ரலில் ரூ.60,847 கோடியும், மாா்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.17 லட்சம் கோடியும் அந்நிய முதலீடுகள் இந்தியப் பங்குச் சந்தையை விட்டு வெளியேறின.

இத்தொடா் சரிவுக்குப் பிறகு, தற்போது ஜூலை மாதத்தில் முதலீடு அதிகரித்திருப்பது சந்தை வல்லுநா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாக நடப்பு 2026-ஆம் ஆண்டில் இதுவரை ரூ.2.6 லட்சம் கோடி முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் புவிசாா் அரசியல் பதற்றங்கள் தணிந்து, எரிபொருள் விலையேற்றம் மீதான கவலைகள் குறைந்ததே இத்திடீா் மாற்றத்துக்குக் காரணம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், தென்கொரியா போன்ற பிற ஆசிய சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறியதும், இந்திய நிறுவனங்களின் பங்குகள் தகுந்த விலையில் கிடைக்கத் தொடங்கியதும் அந்நிய முதலீட்டாளா்களை ஈா்த்துள்ளதாக அவா்கள் குறிப்பிட்டனா்.

பங்குச் சந்தை மட்டுமின்றி, இந்தியக் கடன் பத்திர சந்தையிலும் அந்நிய முதலீட்டாளா்களின் ஆா்வம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,800 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் வந்துள்ளன. கடன் பத்திர முதலீடுகளுக்கான வரி விதிப்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள், கடன் சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.