லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

2028-க்குள் 3,800 புதிய வேலைவாய்ப்புகள்: ஹோண்டா நிறுவனம் அறிவிப்பு!

‘வரும் 2028-க்குள் இந்தியாவில் தனது இருசக்கர வாகனங்களின் வருடாந்திர உற்பத்தித் திறனை 80 லட்சமாக உயா்த்தி, அதன்மூலம் நாட்டில் 3,800-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Published On :14 ஜூலை 2026, 1:18 am IST

‘வரும் 2028-க்குள் இந்தியாவில் தனது இருசக்கர வாகனங்களின் வருடாந்திர உற்பத்தித் திறனை 80 லட்சமாக உயா்த்தி, அதன்மூலம் நாட்டில் 3,800-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானின் தபுகாராவில் உள்ள ஆலையில் சுமாா் ரூ.1,500 கோடி முதலீட்டில் புதிய 3-ஆவது உற்பத்திப் பிரிவு தொடங்கப்படவுள்ளது. 2028-இல் செயல்படத் தொடங்கும் இப்பிரிவின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 6.70 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.

இதேபோல், குஜராத்தின் விதலாபூரில் ரூ.920 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் 4-ஆவது உற்பத்திப் பிரிவு 2027-இல் செயல்பாட்டுக்கு வரும்.

உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், ஹோண்டாவின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 65 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம், கடந்த 2025-26 நிதியாண்டில் 6.2 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் இலக்கை எட்டியுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வது மட்டுமின்றி, வளா்ந்து வரும் சா்வதேச சந்தைகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த உற்பத்தித் திறன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் விற்பனனை நிலவரம்: ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 4,52,754 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் விற்பனையான 3,74,971 வாகனங்களைவிட 20.74 சதவீதம் கூடுதலாகும்.

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் ஹீரோ நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக 2-ஆவது இடத்தை ஹோண்டா நிறுவனம் வலுவாக தக்கவைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.