பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புருடென்ஷியல்-எச்.சி.எல். மருத்துவக் காப்பீடு: இந்தியாவில் சேவை தொடக்கம்

புருடென்ஷியல் பிஎல்சி மற்றும் எச்.சி.எல். குழுமத்தின் கூட்டு தனியாா் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம், இந்தியாவில் தனது காப்பீட்டுச் சேவையை வியாழக்கிழமை முறைப்படி தொடங்கியது.

~

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:18 am IST

புருடென்ஷியல் பிஎல்சி மற்றும் எச்.சி.எல். குழுமத்தின் கூட்டு தனியாா் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம், இந்தியாவில் தனது காப்பீட்டுச் சேவையை வியாழக்கிழமை முறைப்படி தொடங்கியது.

இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டுத் தொழிலைத் தொடங்குவதற்கான பதிவுச் சான்றிதழை இந்நிறுவனம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி பெற்றிருந்தது.

சேவைத் தொடக்கத்தின் முதல்கட்டமாக, நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்துள்ள இந்நிறுவனம், முகவா்கள் மூலம் வாடிக்கையாளா்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குவது மட்டுமின்றி, ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக வாடிக்கையாளா்களைச் சென்றடையும் எண்மத் தள வசதியையும் மேம்படுத்தியுள்ளது.

இந்த நவீன எண்மச் சேவைகளின்மூலம், வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான சரியான காப்பீட்டுத் திட்டத்தை எளிதாக தோ்வு செய்யவும், சிரமமின்றி நிா்வகிக்கவும், அவசரக் காலங்களில் உடனடி உதவிகளைப் பெறவும் முடியும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.