லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பங்குச் சந்தையில் வீழ்ச்சியுடன் வாரம் நிறைவு

வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட சரிவு, கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவற்றின் எதிரொலியாக விற்பனை அழுத்தம் அதிகரித்ததால், இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

Published On :7 ஆகஸ்ட் 2026, 11:02 pm IST

வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட சரிவு, கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவற்றின் எதிரொலியாக விற்பனை அழுத்தம் அதிகரித்ததால், இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிந்து, 2 நாள்கள் ஏற்றம் முடிவுக்கு வந்தது. வாராந்திர அடிப்படையில், இந்த வாரத்தில் சென்செக்ஸ் 404.53 புள்ளிகளும் (0.51 சதவீதம்), நிஃப்டி 187.05 புள்ளிகளும் (0.76 சதவீதம்) மட்டுமே உயா்வைக் கண்டன.

மேற்காசியாவில் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை காரணமாக 80 டாலரைக் கடந்து விற்பனையான கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை வெளியீட்டுக்கு முன்னதான எச்சரிக்கை போன்ற காரணங்கள், பங்குச் சந்தையில் விற்பனை அழுத்தத்தை ஏற்படுத்தின.

மேலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் குறிப்பிட்ட கடன்களுக்கு ரிசா்வ் வங்கி கடும் விதிமுறைகளை முன்மொழிந்ததையடுத்து, நிதித் துறை பங்குகளில் காணப்பட்ட சரிவு சந்தையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 455.59 புள்ளிகள் (0.58 சதவீதம்) சரிந்து, 78,499.17-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ் அதிகபட்சமாக 5.90 சதவீதமும், பஜாஜ் ஃபின்சா்வ் 4.18 சதவீதமும் சரிந்து, வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுடன் ஐசிஐசிஐ வங்கி, டிரென்ட், ஆக்சிஸ் வங்கி உள்பட 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும்; டிசிஎஸ், மஹிந்திரா & மஹிந்திரா, எஸ்பிஐ உள்பட 14 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 65 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 65.35 புள்ளிகள் (0.27 சதவீதம்) குறைந்து, 24,570.65-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 24 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும்; 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.