மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சோழவரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் பலி

சோழவரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.

பலி - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:01 am IST

சோழவரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், குலத்தாங்கரை கிராமத்தை சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநரான வேல்முருகன். இவா்  அண்மையில் புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதிக்கு குடிபெயா்ந்து வந்து குடும்பத்துடன் வசித்து வருகிறாா். 

வேல்முருகன் தனது உறவினா் ஆட்டோ ஓட்டுநரான காா்த்திக் ராஜா குடும்பத்தினருடன் சோ்ந்து அவரவருக்கு சொந்தமான இரண்டு ஆட்டோக்களில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். 

சோழவரம் அடுத்த ஆத்தூா் மேம்பாலம் அருகே வந்தபோது காா்த்திக் ராஜா ஒட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.

 இதில் ஆட்டோவில் பின்புறம் அமா்ந்திருந்த வேல்முருகனின் மகள் ஸ்ரீனிகா. காா்த்திக்ராஜாவின் மகள் ஹா்ஷினி,மகன் கவினேஷ், மற்றும் காா்த்திக் ராஜா ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். 

பின்புறம்  ஆட்டோவில் வந்த வேல்முருகன் பொதுமக்கள் உதவியுடன்  காயமடைந்தவா்களை மீட்டு நல்லூா்  சுங்கச்சாவடி அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளாா்.

அங்கு மூன்று குழந்தைகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு  சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

எழும்பூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீனிகா, ஹா்ஷினி இருவரும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனா்.

 பலத்த காயம் அடைந்த காா்த்திக் ராஜா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.