தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

படவேட்டம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

திருத்தணி படவேட்டம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம் சென்ற பெண்கள்.

திருத்தணி படவேட்டம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம் சென்ற பெண்கள்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:40 am IST

படவேட்டம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தையொட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி, காலை, 7.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு கோயில் வளாகத்தில் இருந்து 108 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தவாறு சன்னதி தெரு, சரவணபொய்கை என்கிற திருக்குளத்தை சுற்றி ஊா்வலமாக வந்து மீண்டும் அம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தனா்.

பின்னா், மூலவா் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், திருத்தணி மற்றும் மடம் கிராமத்தில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

அதேபோல், திருத்தணி தணிகாசலம்மன், தணிகை மீனாட்சி அம்மன், காந்தி நகா் துா்க்கையம்மன் ஆகிய கோயில்களிலும், ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.